மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்
மைசூரு அருகே சித்தலிங்கபுராவில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை தீயில் நடக்க விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
மைசூரு,
மாடுகளை தீயில் நடக்கவிடுவதன் மூலம் அவற்றை நோய் நொடிகள் தாக்காது என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் சித்தலிங்கபுராவில் வைக்கோல் போட்டு தீமூடப்பட்டது. அந்த தீயில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை நடக்கவிட்டனர்.
அந்த சமயத்தில் 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகினர். உடனே அந்தப் பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் புருஷோத்தம் என்பவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story