எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மற்றும் அ.தி.மு.க. நகர அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுவந்தனையில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு மற்றும் தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரத்தில் மாவட்ட மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சந்திரன் தலைமையிலும், சிந்தலக்கரையில் அ.தி.மு.க. கிளை செயலாளர் சாமி சுப்புராஜ் தலைமையிலும், ஆழ்வார்திருநகரியில் நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமையிலும், குரும்பூரில் ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் தலைமையிலும் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரியில் அ.தி.மு.க. நகர செயலாளர் அரசகுரு தலைமையிலும், உடன்குடியில் நகர செயலாளர் ஜெயகண்ணன் தலைமையிலும், உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஒன்றிய செயலாளர் மகாராஜா தலைமையிலும் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உடன்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு முன்னாள் மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் மனோகரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆத்தூரில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ஷேக் தாவூது தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் முருகானந்தம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தேரடி திடலில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கினர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில், கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கயத்தாறில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் கப்பல் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story