குரும்பூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை


குரும்பூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 5:45 PM IST)
t-max-icont-min-icon

குரும்பூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்திருப்பேரை, 

குரும்பூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் மெயின் ரோட்டில் செயல்பட்ட டாஸ்மாக் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில் குரும்பூர் கீழ பஸ்நிறுத்தம் அருகில் நாலுமாவடி செல்லும் சாலையில் வாடகை கட்டிடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக நேற்று முன்தினம் லாரியில் அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, அந்த டாஸ்மாக் கடையில் இறக்கி வைக்கப்பட்டது. நேற்று மதியம் அந்த டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.

போலீஸ் நிலையத்தில் மனு 

இதில் தி.மு.க. நகர செயலாளர் பாலம் ராஜன், பொன் சுந்தர், வர்த்தக மகமை சங்க தலைவர் நயினார் பாண்டியன், வியாபாரிகள் சங்க தலைவர் ஜோசுவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கனிமுத்து, துரை, நாம் தமிழர் கட்சி திருவளவன், சின்னராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

பின்னர் பொதுமக்கள் குரும்பூர் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் மனு அளித்தனர். அதில், குரும்பூரில் இருந்து நாலுமாவடி செல்லும் சாலையில் புதிய டாஸ்மாக் கடையை திறந்தால், பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிப்பதை கண்டித்து, குரும்பூர் பஜார் பிள்ளையார் கோவில் அருகில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து இருந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Next Story