எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிலை- உருவபடத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிலை- உருவபடத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Jan 2019 3:45 AM IST (Updated: 17 Jan 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோபியில் உள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல் முருகன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பெருந்துறை நால் ரோடு சந்திப்பில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு, பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் விஜயன் (பெருந்துறை), ரவிச்சந்திரன் (ஊத்துக்குளி), பெருந்துறை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெரியசாமி, வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜெகதீஸ், கிளை செயலாளர் கேபிள் துரைசாமி, ஊராட்சி செயலாளர் சோமசுந்தரம், கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் பெரியசாமி, ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர் பகுதியில் நடந்த விழாவுக்கு அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில், கூட்டுறவு சங்க தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், பாலுச்சாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பர்கூர் மலைப்பகுதியில் கூட்டுறவு சங்க தலைவர் லிங்கசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது.

இதேபோல் அத்தாணி, சந்தியபாளையம், பிரம்மதேசம், காட்டுப்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், நகலூர், பச்சாம்பாளையம், பள்ளியபாளையம், அண்ணாமடுவு, ஆப்பக்கூடல், புதுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பவானியில் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.ஆர்.துரை, மாவட்ட அச்சுக்கூட தலைவர் சித்தையன், வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில்குமரன், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, மோகன், ஆண்டியப்பன், மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த குஞ்சம்மா, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டை பேரூர் அ.தி.மு.க. சார்பில் தபால் நிலைய பஸ் நிறுத்தத்தில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு பேரூர் செயலாளர் டி.செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூர் அவைத் தலைவர் மாணிக்கவாசகம், அம்மாபேட்டை நிலவள வங்கி துணை தலைவர் கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, சரவணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் எஸ்.ஆர்.டி தியேட்டர் முன்பு எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி, புளியம்பட்டி நகர அ.தி.மு.க பொறுப்பாளர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாபு, அவைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் ஜெயசேகரன், ராஜன், பாலன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊஞ்சலூரில் பஸ் நிலையம் அருகில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வெள்ளோட்டம் பரப்பு, நடுப்பாளையம் பஸ் நிறுத்தம், கருமாண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த விழாவுக்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆரின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகிரியில் உள்ள தியாகி தீரன் சின்னமலை சிலை அருகே நடைபெற்ற விழாவில் சிவகிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சரவணன், முன்னாள் துணைத்தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பழனிச்சாமி மற்றும் வெண்ணிலா பாலு, சதாஸ் செந்தில், பரிமளா மணி, வக்கீல் முத்துச்சாமி, சாந்தகுமார், லியாத் அலி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் சாலைப்புதூரில் நடந்த விழாவுக்கு ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் கவுன்சிலர் சேகர், அண்ணா தொழிற்சங்க பிரதிநிதி பாலசுப்பிரமணியம், முருகேசன், கதிர்வேல், ராமலிங்கம், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். வெங்கம்பூர், கணபதிபாளையம், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம், அஞ்சூர் ஆகிய பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story