வில்லியனூர், மங்கலம் தொகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


வில்லியனூர், மங்கலம் தொகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 18 Jan 2019 4:15 AM IST (Updated: 17 Jan 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர், மங்கலம் தொகுதியில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மூலக்குளம்,

மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு தொகுதி அ.தி.மு.க. செயலாளர் கலியபெருமாள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவிந்தசாமி, துரைக்கண்ணு, லட்சுமணன், ராஜேந்திரன், செல்வமணி, சிவா, இளையபெருமாள், துலக்காணம், காசிநாதன், மண்ணாங்கட்டி, லோகு, பக்கிரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வில்லியனூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவதாஸ், ராமன், முருகையன், வீராசாமி, அய்யாவு, ஜெயபால், லட்சுமணன், ரங்கநாதன், கண்ணப்பன், கலியன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தேவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச்செயலாளர் ராஜசேகர் தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தேவநாதன், கந்தவேல், தமிழ்ச்செல்வன், சாமிநாதன், சத்தியநாராயணன், ஆறுமுகம், பிரகாஷ், வெங்கடாசலம், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் துரைப்பாண்டி, காத்தவராயன், பழனிவேலு, ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், தனஞ்செழியன், பன்னீர்செல்வம், பாலாஜி, அய்யனார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுவை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் தமிழ்மாறன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜாக்கோ, மதன், சதீஷ், முத்து, லோகு, சதீஷ், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story