காஞ்சீபுரம் வாலாஜாபாத் அருகே பாரிவேட்டை திருவிழா


காஞ்சீபுரம் வாலாஜாபாத் அருகே பாரிவேட்டை திருவிழா
x
தினத்தந்தி 18 Jan 2019 3:30 AM IST (Updated: 18 Jan 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாளுக்கு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் உற்சவர் கோவிலில் இருந்து புறப்பட்டு முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜாம்பேட்டை, வாலாஜாபாத், புளியம்பாக்கம் வழியாக பழையசீவரத்தில் உள்ள மலை மீது எந்தருளுவார். பின்னர் வரதராஜபெருமாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சாமியின் மீது விழும் வகையில் மலையின் படிக்கட்டுகள் வழியாக ஒய்யாரமாக இறங்குவார். பின்னர் மலையடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மபெருமாளுடன் பாலாற்றில் இறங்கி தெற்கு கரையில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு காவந்தண்டலம், சாலவாக்கம் கிராமங்களில் இருந்து வந்திருக்கும் பெருமாள்களுடன் இணைந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் திருமுக்கூடல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கிராம மக்களுக்கு பெருமாள்கள் அருள்பாலித்தனர். பாரிவேட்டை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story