பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்; 5 பேர் படுகாயம்


பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Jan 2019 3:45 AM IST (Updated: 18 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள மாலிவாக்க்தில் நேற்று பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு வந்திருந்த திருவொற்றியூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்களையும் பங்கேற்க அனுமதிக்ககோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அதே பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர்கள் உருட்டுக்கட்டையால் அந்த பகுதி மக்களை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் வள்ளி, சரண், விஜி, சுரேந்தர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story