ஊத்துக்கோட்டை அருகே மீன் குழம்பு சாப்பிட்ட 16 பேருக்கு வாந்தி, மயக்கம்
ஊத்துக்கோட்டை அருகே மீன் குழம்பு சாப்பிட்ட வட மாநில வாலிபர்கள் 16 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழில் பூங்காவில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ரியாஜ் (வயது 24), சாத் (23), ரஷீத் (22), மருதுல்இஸ்லாம் (21), ரகீம் (23), அப்துல்உசேன் (22), ஜஹங்கீர் (20), முகமத் (22), தாஜீத்தீன் (23), பாபுலால் (22), பிரசாந்த்சந்த் (21), ரஷீத்லால் (23), முகமதுஷபியுல்லா (25), மில்லத் (22), அகமதுரியாஜ் (22), ஷபியுல்இஸ்லாம் (23) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கத்தில் உள்ள குடியிருப்பில் வாடகை வீடுகளில் தங்கி தேர்வாய்கண்டிகையில் உள்ள தொழிற்சாலையில் வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். மீன் குழம்பு சாப்பிட்ட அனைவருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கி கீழே விழுந்த சிலர் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர் களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீன் குழம்பில் பல்லி விழுந்ததா? அல்லது கெட்டு போன மீனை சமைத்து சாப்பிட்டதால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதா? என்று ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story