திருப்பூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


திருப்பூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 17 Jan 2019 11:00 PM GMT (Updated: 17 Jan 2019 10:42 PM GMT)

திருப்பூரில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பூர்,

நாடு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைபுதூர் நடராஜன், சத்தியபாமா எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பழனிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்பகம் திருப்பதி, தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் பழனிசாமி, கருணாகரன், கண்ணன், கணேஷ், பட்டுலிங்கம், விவசாய பிரிவு செயலாளர் புத்தெரிச்சல் பாபு, நகர இளைஞரணி செயலாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்த அவர்கள் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல, எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அனுப்பர்பாளையம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சிட்டி ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் உத்ராபதி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதுபோல அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் நடைபெற்ற விழாவுக்கு பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் பந்தல் தனபால் தலைமை தாங்கினார்.

வார்டு செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் வடிவேல், குப்புசாமி, நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுப்பர்பாளையத்தில் மாவட்ட பாத்திர தொழில் சங்க செயலாளர் கண்ணப்பன் தலைமையிலும், 15 வேலம்பாளையத்தில் வார்டு செயலாளர் ரத்தினசாமி தலைமையிலும் விழா நடந்தது. இதில் அங்கேரிபாளையம் பகுதி செயலாளர் பாலுசாமி, சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதிய நீதிகட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story