திருக்கடையூரில் மாடு-குதிரை வண்டி பந்தயம் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
திருக்கடையூரில் மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
திருக்கடையூர்,
நாகை மாவட்டம், திருக்கடையூரில் நேற்று உத்திராபதியார், நாராயணசாமி ஆகியோரின் நினைவு நாள் மற்றும் காணும் பொங்கலையொட்டி மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய துணை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் என்.ஜி.கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரைராஜன், எழில்நம்பி, சுந்தரவடிவேல், நாம் தமிழர் கட்சி நாகை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்றார்.
இதனையடுத்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகில் இருந்து பந்தயம் தொடங்கியது. இதில் மாட்டு வண்டி பந்தய எல்லையான 6 கி.மீட்டர் தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரை பந்தய எல்லையான 8 கி.மீட்டர் தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூருக்கு திரும்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகியவை அனுமதிக்கப்பட்டன. இந்த பந்தயத்தில் முதல் பரிசாக சின்னமாட்டுக்கு ரூ.6 ஆயிரம், நடு மாட்டிற்கு ரூ.8 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.10 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.12 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.15 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.18 ஆயிரம் என பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூர், தில்லையாடி, டி.மணல்மேடு, காழியப்பநல்லூர், பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு, கிள்ளியூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய வட்டார பொதுமக்கள் செய்து இருந்தனர். முடிவில் பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story