பெருந்துறையில் 20 அடி நீளத்துக்கு தார்ரோடு பெயர்ந்தது


பெருந்துறையில் 20 அடி நீளத்துக்கு தார்ரோடு பெயர்ந்தது
x
தினத்தந்தி 19 Jan 2019 3:30 AM IST (Updated: 18 Jan 2019 6:31 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை - சென்னிமலை செல்லும் ரோட்டில் சுமார் 20 அடி தூரத்துக்கு தார் ரோடு பெயர்ந்து குழிபோல் பழுதாகிவிட்டது.

பெருந்துறை,

பெருந்துறையில் எல்லை மேடு என்ற இடம் அருகே பாரதி கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சென்னிமலை செல்லும் ரோட்டில் சுமார் 20 அடி தூரத்துக்கு தார் ரோடு பெயர்ந்து குழிபோல் பழுதாகிவிட்டது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் குழி இருப்பது தெரியாமல் இறங்கி விபத்துக்கு உள்ளாகிறார்கள். பகல் நேரத்தில் வருபவர்கள் கூட ரோடு பழுதாகி இருப்பது தெரியாமல் தடுமாறுகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைவாக அந்த பகுதியில் தார் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Next Story