மத்தூர் அருகே பொங்கலையொட்டி மாட்டு சண்டை


மத்தூர் அருகே பொங்கலையொட்டி மாட்டு சண்டை
x
தினத்தந்தி 19 Jan 2019 4:15 AM IST (Updated: 19 Jan 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பொங்கலையொட்டி மாட்டு சண்டை நடைபெற்றது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது கூச்சூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பழையூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மாட்டு சண்டை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேர்ந்து விடப்பட்ட மாடுகளை கொண்டு வந்து ஒன்றோடு ஒன்று மோத செய்வார்கள்.

அதன்படி நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த கோவில் மாடுகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மேள தாளங்கள் முழங்க மாடுகளை கோவிலை சுற்றி பொதுமக்கள் அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இரண்டு மாடுகளாக மோத விட்டு சண்டை நடைபெற்றது. அப்போது மாடுகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமாக முட்டிக் கொண்டன. சிறிது நேரம் மாடுகள் மோதியவுடன் அவற்றை அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர். இந்த விழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.


Next Story