கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 19 Jan 2019 5:00 AM IST (Updated: 19 Jan 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக் குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட ஆவின் துணை தலைவர் குப்புசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் தங்கமுத்து, மாவட்ட விவசாய சங்க செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன், கூட்டுறவு சங்க தலைவர் பி.டி. சுந்தரேசன், கட்சி நிர்வாகி கே.பி.எம்.சதிஷ், கூட்டுறவு வங்கி தலைவர் திருநாவுக்கரசு, ஆறுமுகம், சாரதா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

வேப்பனப்பள்ளி, கல்லாவி

வேப்பனப்பள்ளியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமு, சாமண்ணா, அக்பர், ராஜாராம், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சங்கர்நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சத்தியநாராயண மூர்த்தி, பஷீர், முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர்கள் சின்னசாமி, வெங்கடேசன், அபரஞ்சி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லாவியில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவணப்பட்டியில் ஊராட்சி செயலாளர் வையாபுரி தலைமையிலும், அனுமன்தீர்த்தத்தில் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், காரப்பட்டுவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பண்டரிநாதன் தலைமையிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஓசூர், மத்தூர்

ஓசூரில் மாவட்ட உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓசூர்-பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை செயலாளர் அன்புமொழி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மாதையன், இளைஞரணி துணை செயலாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜோசப், அந்தோணி, செந்தில், தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்தூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் தேவராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் பியாரேஜான், மாணவரணி செயலாளர் சக்தி, மாணவரணி அவைத்தலைவர் செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் முருகன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் பகதூர், கூட்டுறவு சங்க தலைவர் ஷாஜகான், ஒப்பந்ததாரர் முனுசாமி முன்னாள் விவசாய அணி துணைத்தலைவர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் நாகேஷ் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கிராமரெட்டி, நாகேஷ், நகர செயலாளர் பழனிசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராமன், வெங்கடாஜலபதி, அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ஜாகீர்உசைன், சாந்த்பாஷா, பிரான்சிஸ், மீனவரணி தலைவர் பசவராஜ், ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story