வந்தவாசி அருகே பொங்கல் பண்டிகையையொட்டி முயல்விடும் திருவிழா
வந்தவாசி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி முயல் விடும் திருவிழா நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தில் மக்கள் நலனுக்காகவும், விவசாய மேம்பாட்டிற்காகவும், குழந்தைகளின் தோஷம் நீங்கவும் காணும் பொங்கல் அன்று நரியை ஓட விடுவது வழக்கம். இந்த விழா 100-ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
நரி கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக முயல் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் காணும் பொங்கல் தினத்தையொட்டி நல்லூர் கிராம மைதானத்தில் முயல் விடும் விழா நடந்தது. இதையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள தருமர், திரவுபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கிராமத்தையொட்டி உள்ள மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கு பூஜைகள் நடந்தன.
மேலும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் ஒரு நிகழ்வாக வாழை மரம் ஒன்றை கட்டி வைத்து அதனை வெட்டி விட்டனர். அந்த வாழை மரத்தின் நார்களை தனியாக பிரித்து அங்கிருந்த மக்கள் அதனை அரைஞாண் கயிறாக கட்டிக் கொண்டனர். அப்படி கட்டிக் கொண்டால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
பின்னர் முயலை ஒருவர் பிடித்துக்கொள்ள குழந்தைகள் மீது முயலை வைத்து தோஷம் கழித்தனர். பின்னர் முயலை அங்கிருந்து சிறிது தூரம் எடுத்துச் சென்று கீழே விட்டனர். முயல் மேற்கு திசையை நோக்கி ஓடியது. அவ்வாறு மேற்கு திசையை பார்த்து ஓடினால் கிராமம் சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து திரவுபதி அம்மன் கிராமத்தில் உள்ள வீதிகளில் ஊர்வலம் நடந்தது. விழாவில் நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story