நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதைதொடர்ந்து அவர் பிரதான சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் நாமக்கல் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு மற்றும் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மோகனூர்
மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒருவந்தூர் ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இதில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் நடராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், நீரேற்று பாசன சங்க துணைத்தலைவர் சதாசிவமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி, பெரமாண்டம்பாளையம் ஊராட்சியில், மணப்பள்ளி கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிதம்பரம் கட்சி கொடியை ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதில் கட்சியின் ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரூர் ஊராட்சியில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் உமாபதி தலைமையிலும், என்.புதுப்பட்டி ஊராட்சியில் கட்சியின் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையிலும் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.வாழவந்தியில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கியும், ஏழை மக்களுக்கு வேட்டி-சேலை வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் கணேசன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் சேகர், மோகனூர் சர்க்கரை ஆலை நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி, கூட்டுறவு சங்க இயக்குனர் ஜெய்சங்கர் மற்றும் சிங்காரம், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராசிபுரம்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாம கிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா ஈஸ்வரமூர்த்திபாளையம், மங்களபுரம், இந்திரா நகர், ஆயில்பட்டி, மெட்டாலா, அண்ணாநகர் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் எம்.ஜி.ஆர். உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. விழாவிற்கு ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். தலைவரும், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான இ.கே.பொன்னுசாமி தலைமை தாங்கினார். அவர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், லட்டு போன்ற இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மங்களபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.பி.சரவணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளரும், நாமகிரிப்பேட்டை நிலவள வங்கி தலைவருமான என்ஜினீயர் அரவிந்தன், ஆவின் துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர்கள் ஜெகநாதன், அமுதா, ஆயில்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் டாக்டர் ராமசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் 33 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 6-வது வார்டு நடராஜா நகரில் நகர அ.தி.மு.க. செயலாளர் நாகராஜன் தலைமையில் கட்சிகொடியேற்றி வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது.
நாமக்கல் மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் சரவணமுத்து தலைமையில் குமாரபாளையம் போலீஸ் நிலையம் எதிரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் விட்டலபுரி கட்சி அலுவலகத்தில் நகர செயலர் உதயராஜ் தலைமையில் நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story