மதுரைக்கு 27-ந் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிடுவோம் வைகோ அறிவிப்பு
மதுரைக்கு 27-ந் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிடுவோம் என தஞ்சையில் வைகோ அறிவித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் நடந்த ஒரு திருமணவிழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை வந்து பார்வையிடவில்லை. உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர், தன் நாட்டில் கஜா புயலால் பாதித்த தமிழக மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூட சொல்ல வராமல் இருப்பது வேதனை தருகிறது. ஆறுதலுக்காக ஒரு அறிக்கை கூட விடவில்லை. தமிழக மக்களை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழக மக்கள் நலனை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. வேளாண்மை மண்டலமான டெல்டாவை, பெட்ரோலிய பொருளாதார மண்டலமாக மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இங்கு வாழும் மக்களை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை.
மதுரைக்கு வருகிற 27-ந் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும். கருப்பு பலூன்களை பறக்கவிடுவோம். இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்.
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்தில் பல மாவட்டங் கள் பாலைவனமாகி விடும்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்கு என்றென்றும் ம.தி.மு.க. துணை நின்று போராடும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதற்கு நாங்கள் முழுமையாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மேகதாதுவில் அணை கட்ட மறைமுகமாக உதவி செய்ததற்காகவும் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியபோது இங்கே பார்வையிடாதது மட்டுமல்ல, தேவையான நிதியை கொடுக்காததை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மறைமுகமாக உதவி செய்வதையும் கண்டித்தும் மதுரைக்கு வருகிற 27-ந் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எனது தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என்றார்.

Related Tags :
Next Story