கீழ்வேளூர் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கீழ்வேளூர் அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர்,
கீழ்வேளூரை அடுத்த தேமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார வளாகம் உள்ளது. இதன் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து தேமங்கலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்ததால் இந்த தொட்டியை செயல் இழக்க செய்துவிட்டு, கிராம நிர்வாக அலுவலகம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டரின் நிதியில் இருந்து புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பழுதடைந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த தொட்டி அமைந்துள்ள இடத்தை சுற்றி அரசு ஆரம்ப சுகாதார வளாகம், கிராம நிர்வாக அலுவலகம், கூட்டுறவு அங்காடி, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், நூலகம் மற்றும் அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு மக்கள் நாள்தோறும் பல்வேறு சான்றுகள் பெறுவதற்கும், அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்கும் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.
பழுதடைந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் கடந்து செல்லும் போது எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story