பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரை ஒட்டியுள்ள பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு அன்னை வியாகுல மாதா திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை துணை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள், வீரர்களை நெருங்க விடாமல் விரட்டியும், முட்டி தூக்கி வீசியும் சென்றன. சில காளைகளை வீரர்கள் அடக்கினர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, மேஜை, சைக்கிள், ஹெல்மேட், கட்டில், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, சுவர் கடிகாரம், பிளாஸ்டிக் பொருட்கள், ரொக்கப்பணம் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
வீரர்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து, களம் இறங்கினர். முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் 446 காளைகளும், 227 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் சுழல் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் காளையை ஒரு நபர் மட்டுமே பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணியில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் ஆம்புலன்சுகள், தீயணைப்பு துறை வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story