தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் 2 நாட்கள் நடக்கிறது


தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் 2 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 20 Jan 2019 3:00 AM IST (Updated: 19 Jan 2019 7:19 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பயிலரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

தமிழ் வளர்ச்சிச்துறை

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வருகிற 29–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30–ந் தேதி (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளது.

29–ந் தேதி மாவட்ட வருவாய் அலுவலரின் பயிலரங்க தொடக்க உரையை தொடர்ந்து பயிரலங்கில் ஆட்சிமொழி வரலாறுச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும் குறைகளின் நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

கருத்தரங்கம்

30–ந் தேதி நடக்கும் கருத்தரங்கில், அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சம்சுதீன் செயல்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story