மாவட்ட செய்திகள்

புவனகிரி அருகே தீக்குளித்து மெக்கானிக் தற்கொலை அண்ணன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு + "||" + the mechanic suicide fire bath Dangerous decision in the death of brother

புவனகிரி அருகே தீக்குளித்து மெக்கானிக் தற்கொலை அண்ணன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு

புவனகிரி அருகே தீக்குளித்து மெக்கானிக் தற்கொலை அண்ணன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு
புவனகிரி அருகே தனது அண்ணன் இறந்ததால், சோகத்தில் இருந்த மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரங்கிப்பேட்டை,

புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன்கள் சக்திவேல்(வயது 36), முரளி(34) ஆவார்கள். இவர்களில் சக்திவேல் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முரளி மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். இந்த நிலையில், கடந்த 11–ந்தேதி வீட்டில் இருந்த சக்திவேல் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணன் இறந்த வேதனையில் இருந்து முரளியால் மீண்டு வர முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த முரளி, தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், முரளி சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் உடல் கருகிய முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை பார்த்து பெற்றோர், மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனது அண்ணன் பிரிந்து வாழ முடியாத சோகத்தில், தம்பியும் அவரை போன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
2. லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு
லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. ‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.
5. கணவரின் கடன் தொல்லையால் தூக்கு போட்டு பெண் தற்கொலை
கணவரின் கடன் தொல்லையால் வேதனை அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.