வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொழில் திறன் பயிற்சி இளையான்குடியில் நடக்கிறது


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொழில் திறன் பயிற்சி இளையான்குடியில் நடக்கிறது
x
தினத்தந்தி 20 Jan 2019 3:45 AM IST (Updated: 20 Jan 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெறுபவர்களுக்கான தொழில் திறன் பயிற்சி இளையான்குடியில் நடக்கிறது.

சிவகங்கை,

வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வருகிற 24–ந்தேதி இளையான்குடி தாலுகாவில் உள்ள டாக்டர்.ஜாகிர்உசேன் கலைக்கல்லூரியில் தொழில் திறன் பயிலரங்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்படவுள்ளது.

இந்த திறன் பயிலரங்கத்தில் தனியார்துறை திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளவர்களை பதிவு செய்ய உள்ளனர். எனவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் காலை 10.30 மணி அளவில் கல்லூரிக்கு வருகை புரிந்து இந்த திறன் பயிற்சி பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story