ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Jan 2019 3:45 AM IST (Updated: 20 Jan 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஆதனூர் டி.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவர் கடந்த 13-ந்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் ரொக்கப்பணம் ரூ. 8 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவிந்தராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story