பீட் மாவட்டத்தில் பா.ஜனதா கவுன்சிலர் வெட்டிக்கொலை சகோதரர்களான 6 பேர் வெறிச்செயல்
பா.ஜனதா கவுன்சிலரை, சகோதரர்கள் 6 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர்.
பீட்,
பீட் மாவட்டம் அம்பாஜோகாய் பகுதியை சேர்ந்த பா.ஜனதா கவுன்சிலர் விஜய் சேசேராவ்(வயது 34). இவரது சகோதரர் நிதின், சம்தா நகர் பகுதியில் வசித்து வந்தார். நிதினுக்கும் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 6 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சம்பவத்தன்று சகோதரர்கள் 6 பேரும் சேர்ந்து நிதினை அவரது வீட்டருகே வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.
அப்போது அங்கு வந்த கவுன்சிலர் விஜய் சேசேராவ், தனது சகோதரர் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர்களை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ஆத்திரம் தலைக்கேறிய அவர்கள் தங்களிடம் இருந்த வாளால் கவுன்சிலரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கவுன்சிலரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலரை கொலை செய்த சகோதரர்கள் 6 பேரில் 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story