சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி


சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2019 3:45 AM IST (Updated: 21 Jan 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி பலியாயினர்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் இவரது மகன் அபிஷேக் (வயது 19). இவரும், அதேபகுதியை சேர்ந்த ஆதாம் என்பவரின் மகன் ஆசாத் (19) என்பவரும் நண்பர்கள். இருவரும் எழும்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அபிஷேக்கும், ஆசாத்தும் நேற்று முன்தினம் இரவு பேக்கரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டினார். சேத்துப்பட்டு குருசாமி பாலம் தாண்டி செல்லும்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள சிக்னல் கம்பத்தில் பலமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆசாத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசாத்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்று ஆசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் இருவர் சாலை விபத்தில் பலியான சம்பவம் புல்லாபுரம் பகுதியையே சோகத்தில் மூழ்கடித்து உள்ளது.

Next Story