அரசு அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்


அரசு அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்க நடவடிக்கை அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 7:41 PM GMT)

அரசு அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்குவது தொடர்பான கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி மற்றும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான பயிற்சியை மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் தேவநாதன் அளித்தார்.

இதையடுத்து கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசுகையில், அனைத்து அலுவலகங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் முதல் ஒப்பந்த பணியாளர்கள் வரை உள்ள அனைத்து அலுவலர்களையும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் குறித்த பயிற்சி கையேட்டில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகளை அனைத்து துறை தலைமை அலுவலர்களும் பயிற்சியாக அளிக்க வேண்டும், என்றார். 

Next Story