எடப்பாடியில் தைப்பூச காவடிகள் ஊர்வலம்
எடப்பாடியில் தைப்பூச காவடிகள் ஊர்வலம் நடைபெற்றது.
எடப்பாடி,
எடப்பாடியில் இருந்து பழனிக்கு கடந்த 359 ஆண்டுகளாக தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு பல குழுக்களாக பக்தர்கள் பாதயாத்திரை சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு மீண்டும் பாதயாத்திரையாக எடப்பாடிக்கு வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல உள்ளனர்.
அதையொட்டி எடப்பாடி வெள்ளாண்டிவலசை வன்னியர் குலசத்திரிய ஆதி பரம்பரை காவடிகள், மேட்டுத்தெரு வன்னியர் குலசத்திரிய காவடிகள், ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு வன்னியர் குலசத்திரிய காவடிகள், நாச்சியூர் வன்னியர் குலசத்திரிய காவடிகள் கட்டப்பட்டு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
வழி நெடுகிலும் பூக்கள், காய்கறிகள் போன்றவற்றால் அலங்காரம் செய்து பொதுமக்கள் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும், ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு வன்னியர் குல சத்திரிய காவடிகள் கட்டப்பட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டு வருகிற 24-ந்தேதி பழனிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதேபோல வெள்ளாண்டிவலசை வன்னியர் குல சத்திரிய ஆதி பரம்பரை காவடிகள் கட்டப்பட்டு பழனிக்கு பாதயாத்திரையாக நாளை மறுநாள் (புதன்கிழமை) செல்ல உள்ளனர்.
இந்த காவடியுடன் பாதயாத்திரையாக செல்பவர்களுக்கு வட்டமலையில் வன்னியர்குல சத்திரிய மருத்துவ அறக்கட்டளை மற்றும் எடப்பாடி கே.ஆர்.எஸ். மருத்துவமனை, சர்க்கரை நோய் மையம் சார்பில் டாக்டர் ரவிசுதன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, ஊசி, மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. எடப்பாடி பருவதராஜகுல மகாசனங்களின் காவடிகள் கட்டப்பட்டு வருகிற 26-ந் தேதி பாதயாத்திரையாக பழனி மலைக்கு சென்று சாமிதரிசனம் செய்து மலை மீது தங்கியிருந்து பஞ்சாமிர்தம் செய்து அனைவருக்கும் வழங்க உள்ளனர்.

Related Tags :
Next Story