உடற்பயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் அமைச்சர் காமராஜ் பேச்சு
உடற்பயிற்சியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
குடவாசல்,
குடவாசல் ஒன்றியம் வேம்பனூர் ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு குடவாசல் கல்வி புரவலர் தினகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாப்பா.சுப்பிரமணியன், ஆசைமணி, ஓகை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குடவாசல் ஒன்றியத்தில் பூங்கா அமைத்திட ரூ.30 லட்சம் ஒதுக்கினார். அதன்படி இந்த கட்டிடம் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் கேட்காமலேயே இந்த திட்டம் இங்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் மாலை நேரங்களில் மன மகிழ்ச்சிக்காக இங்கு வந்து விளையாட்டு, உடற்பயிற்சி என பொழுது போக்கினை பூங்காவில் கழிக்கலாம். உடற்பயிற்சியால் உடல் வளர்ச்சி பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எனவே உடற்பயிற்சி கூடத்தை சிறுவர்களும், பெரியவர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தாசில்தார் பிரிதிவிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story