உறவினர் அபகரித்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் தற்கொலை செய்ய டீசல்கேனுடன் வந்த விவசாயி
உறவினர் அபகரித்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்காக டீசல்கேனுடன் விவசாயி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்தனர். இதில் பலர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், குழுக்கடன்களை ரத்து செய்யக்கோரியும் மனுக்கள் அளித்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வரும் வடிவேல் மகன் மகேந்திரன் (வயது58) என்ற விவசாயி தனது மனைவி ஜோதி மற்றும் மகன். மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 5 லிட்டர் கேனில் டீசல் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர் சொத்து பிரச்சினை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு, டீசல் கேனை எடுத்துக்கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டீசல் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் மகேந்திரனிடம் விசாரணை நடத்திய போது அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் நல்லிச்சேரி ஆகும். இங்கு எனது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக சொத்தான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை உறவினர் அபகரித்து வைத்துக்கொண்டு எனக்கு எந்தவித பாகமும் தர மறுக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை செய்து எனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும்” என்றார்.
அப்போது திடீரென மகேந்திரன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதையடுத்து அவர் மயக்கம் தெளிந்து எழுந்தார். அதன் பின்னர் மகேந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story