கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர் போலீசார் மடக்கி பிடித்தனர்


கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபர் போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 9:22 PM GMT)

நுகர்பொருள் வாணிப கழகத்தினர் பணம் தராததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

சிவகங்கை,

மானாமதுரையை அடுத்த கொன்னகுளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 29). இவர் கடந்த மாதம் மானாமதுரையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலையில் இருந்த சாம்பலை அப்புறப்படுத்தும் பணியை செய்தார். இதற்காக இவருக்கு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் தர வேண்டுமாம்.

இந்த தொகையை வாங்க அவர் பலமுறை அலைக்கழிக்கப்பட்டும், அந்த பணம் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை சம்பந்தபட்டவர்களிடம் தெரிவித்தும், அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் அவர் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர் அவர் திடீரென இந்த பிரச்சினையை வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றாராம்.

இதைப்பார்த்த அங்கிருந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வாலிபர் காளீஸ்வரனை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடமிருந்த கேனை கைப்பற்றினர். ஆனால் கேனில் தண்ணீர் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் காளீஸ்வரனை போலீஸ்நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர்.


Next Story