நாடாளுமன்ற தேர்தல், நாமக்கல் மாநாட்டுக்கு பிறகு கூட்டணி முடிவு செய்யப்படும்


நாடாளுமன்ற தேர்தல், நாமக்கல் மாநாட்டுக்கு பிறகு கூட்டணி முடிவு செய்யப்படும்
x
தினத்தந்தி 22 Jan 2019 5:53 AM IST (Updated: 22 Jan 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் கூறினார்.

மேட்டுப்பாளையம், 

2-வது உலக கொங்கு தமிழ் மாநாடு கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் நாமக்கல்லில் வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோவை வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதற்கு நகர துணைத்தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் திருமூர்த்தி வரவேற்றார்.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நாமக்கல்லில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் 2-வது உலக கொங்கு தமிழ் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. நிகழ்ச்சியில் பேரவை கவுரவ தலைவர் என்.கே.பொன்னுசாமி, பொருளாளர் கந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர் பாலு, நகர மகளிரணி தலைவி தமிழ்ச்செல்வி, செயலாளர் சாந்தி மற்றும் பலர்கலந்து கொண்டனர். முடிவில் கோவை தலைமை நிலைய செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பது தான் தமிழகத்தில் தலையாய பிரச்சினையாக உள்ளது. நீர்நிலைகள் மாசுபடு வதால் பொதுமக்கள் தொற்று நோய்களால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இதற்காக நாங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பது நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு முடிவு செய்யப்படும். அவினாசி- அத்திக்கடவு திட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் விடுபட்ட பகுதிகளையும் இணைத்து பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story