பாலத்தில் விபத்து கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது டிரைவர் உடல் கருகி சாவு


பாலத்தில் விபத்து கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது டிரைவர் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 23 Jan 2019 4:46 AM IST (Updated: 23 Jan 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

தகானுவில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில்,டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.

வசாய்,

குஜராத்தில் பாருச் பகுதியில் இருந்து நேற்று ஹைட்ரஜன் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நவிமும்பை தலோஜா நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை டிரைவர் அவத் பிகாரி என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த லாரி மாலை 4 மணியளவில் பால்கர் மாவட்டம் தகானு சரோட்டி பாலத்தில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், துரதிருஷ்டவசமாக லாரி பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயில் சிக்கி டிரைவர் அவத் பிகாரி உடல் கருகி உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் விக்ரம்காட் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன.

Next Story