கள்ளக்காதலியின் மகளை கொன்று வாலிபர் தற்கொலை


கள்ளக்காதலியின் மகளை கொன்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2019 4:58 AM IST (Updated: 23 Jan 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியின் மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புனே,

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்தவர் விஜய் யாதவ் (வயது26). இவர் புனே தாபோடி பகுதியில் உள்ள உணவு விடுதியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த விதவை பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அண்மையில் விஜய் யாதவுக்கும், அந்த பெண்ணுக்கும் திடீரென பிரச்சினை உண்டானது. அப்போது, அந்த பெண் இனி தனது வீட்டுக்கு வரக்கூடாது என அவரை கடுமையாக திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் விஜய் யாதவ் நேற்றுமுன்தினம் கள்ளக்காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் அந்த பெண் வேலைக்கு சென்றிருந்தார். அவரது 7 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விஜய் யாதவ் சிறுமியை மானபங்கம் செய்தார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி சத்தம் போட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் யாதவ் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் போலீசுக்கு பயந்த அவர், அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய விதவை பெண் மகள் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமி மற்றும் விஜய் யாதவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story