கருமந்துறையில் போலி பெண் டாக்டர் கைது
கருமந்துறையில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (வயது 36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக கருமந்துறை கிழக்காடு பிரிவுரோடு பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார்.
அந்த கடைக்கு வந்த மலைவாழ் மக்களுக்கு மாத்திரை கொடுப்பதுடன் டாக்டர் போல ஊசி, குளுக்கோஸ் போன்றவற்றை போட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுபற்றி பெத்தநாயக்கன்பாளையம் அரசு டாக்டர் ஜெயசெல்விக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர் தலைமையிலான குழுவினர் கருமந்துறைக்கு சென்று மருந்து கடையை ஆய்வு செய்தனர். அப்போது கடையில் டாக்டர்கள் பயன்படுத்தும் கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மருத்துவம் பார்த்து வந்தது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து கருமந்துறை போலீசில் டாக்டர் ஜெயசெல்வி புகார் செய்தார்.
அதன்பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் டாக்டர் உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story