ஜீரோ மோட்டார் சைக்கிள்


ஜீரோ மோட்டார் சைக்கிள்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:19 PM IST (Updated: 23 Jan 2019 4:19 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது.

பேட்டரியில் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிளின் பெயர் ஜீரோ. அதாவது எரிபொருளாக பெட்ரோல் தேவையில்லை, புகை கக்காது.

இதனாலேயே இதற்கு ஜீரோ மோட்டார் சைக்கிள் என பெயர் சூட்டியுள்ளது இந்நிறுவனம். பேட்டரி மோட்டார் சைக்கிளில் புரட்சியை இது ஏற்படுத்தும் என்று நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.

ஜீரோ எஸ்.ஆர்.எப். என இதற்கு பெயரிட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது 35 சதவீதம் கூடுதல் சக்திகொண்டது. ஸ்டைலான வடிவமைப்பு, கண்ணைக் கவரும் நிறம் ஆகியவற்றுடன் பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டதாக இது அறிமுகமாகிறது. உயர் திறன் கொண்ட பேட்டரி மாடல் மற்ற மாடல் மோட்டார் சைக்கிளை விட 50 கிலோ எடை கூடுதலாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஜீரோ எஸ்.ஆர். மாடலில் பேட்டரி அதன் பெட்ரோல் டேங்க் வடிவிலான முன்பகுதியில் உள்ளது. இந்த பேட்டரி திறனை 3.6 கிலோவாட் வரை அதிகரிக்க முடியும்.

இது 70 ஹெச்.பி. திறனை வெளியிடுவதோடு 157 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளியிடக் கூடியது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 359 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவிலேயே இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story