வானவில் : பாடம் நடத்தும் ரோபோ


வானவில் : பாடம் நடத்தும் ரோபோ
x
தினத்தந்தி 23 Jan 2019 11:14 AM GMT (Updated: 23 Jan 2019 11:14 AM GMT)

எல்லாத் துறைகளிலும் ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில் ஆசிரியப் பணியும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளது ஐ லேர்ன் என்கிற நிறுவனம்.

இந்த நிறுவனம் ‘அனி’ என்கிற நவீன வகை ரோபோவை உருவாக்கியுள்ளது. செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ரோபோ, ஒவ்வொரு மாணவனின் மனநிலைக்கும், அறிவாற்றலுக்கும் ஏற்றவாறு கற்பிக்கக்கூடியது. மாணவர்களுடைய திறன், கடினமான களங்கள் என அனைத்தையும் அறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சிஅளிக்கிறது.

ஒரு நண்பனைப் போல் இது நடந்து கொள்வதால் மாணவர்களுக்கு கற்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கற்பதில் பிரச்சினை இருக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாணவனைப் பற்றிய முழு தகவல்களையும் பதிவு செய்து அவர்களது கல்வியில் உள்ள முன்னேற்றத்தையும் அளவிடுகிறது. ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் இருக்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இந்த அனி ரோபோ மிகவும் பயன்படும் என்கின்றனர்.

Next Story