வானவில் : சுழற்றுவதன் மூலம் சார்ஜ் ஆகும் பிட்ஜெட் ஸ்பின்னர்
மனதை ஒருநிலைப்படுத்தவும், விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்ட பிட்ஜெட் ஸ்பின்னர் எனப்படும் பொருளைக் பவர்பேங்க்காக உபயோகிக்கும் படி உருவாக்கியுள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மார்ட் ஜூம் நிறுவனத்தினர்.
இக்கருவியை கையில் வைத்து சுற்றும் போதே அதிலிருந்து பெரும் சக்தியைக் கொண்டு நமது போனை இணைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.
சாதாரண முறையிலும் யு.எஸ்.பி. கேபிள் மூலமும் இக்கருவியில் இருந்து முப்பது நிமிடத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். சார்ஜர் எடுத்து செல்ல மறந்துவிட்டால் அவசரத்திற்கு இக்கருவியை சுழற்றுவதன் மூலம் சார்ஜை பெறலாம்.
ஒரே நேரத்தில் விளையாட்டு மற்றும் சார்ஜ் ஆகிய இரண்டையும் இந்த கருவியைக் கொண்டு பெற முடியும். ஸ்மார்ட் போன்கள் மட்டுமின்றி கேமராக்கள், ஸ்மார்ட் வாட்சுகள், எம்.பி.3 பிளேயர்களிலும் இம்முறையில் சார்ஜ் ஏற்றலாம். 240 mAh கொண்ட பேட்டரி இக்கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.
சிறியதாக இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் இதை எடுத்துச் செல்லலாம்.
Related Tags :
Next Story