வானவில் : கண்களுக்கு அருகிலேயே உலகத்தை காட்டும் ஸ்மார்ட் கண்ணாடி


வானவில் : கண்களுக்கு அருகிலேயே உலகத்தை காட்டும் ஸ்மார்ட் கண்ணாடி
x
தினத்தந்தி 23 Jan 2019 12:04 PM GMT (Updated: 23 Jan 2019 12:04 PM GMT)

ஸ்மார்ட் யுகத்தின் புதிய வரவாக களமிறங்கியுள்ளது மேட் கேஸ் X 5 ( MAD GAZE X 5) ஸ்மார்ட் கண்ணாடிகள். மேட் கேஸ் X 5 கண்ணாடி பல விருதுகள் பெற்றுள்ளது.

இதன் தொழில்நுட்பத்தில் அனைத்து முக்கியமான அம்சங்களையும் ஒரே கருவியில் கொண்டு வந்திருக்கிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட் க்ளாசில் 8 எம்.பி. கேமரா உள்ளதால் ஹெச்.டி. தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும்.

இதன் சிறிய திரை வழியே உலகத்தையே பார்க்க முடியும் என்கின்றனர் இதன் நிறுவனர்கள். 32 ஜி.பி. சேமிப்பு வசதியும் இந்த கண்ணாடியில் உள்ளது.

நமது குரல் மூலம் இதை கட்டுப்படுத்தி இயக்கும் வசதியும் உள்ளது. 1080 பிக்ஸல்கள் கொண்ட தரமான வீடியோக்களை பார்த்து மகிழலாம். இந்த கண்ணாடியை விரல்கள் தொடாமலேயே சைகைகள் மூலம் இயக்க முடியும். கூகுள் தேடுதல், ஜி.பி.எஸ். கொண்டு வழி தேடுவது, வானிலை அறிக்கை போன்ற அனைத்தையும் வெகு சுலபமாக நம் விழியின் அருகிலேயே கொண்டு வருகிறது இந்த கண்ணாடி.

Next Story