மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்3,500 பேர் கைது + "||" + Across the district Government employees, teachers stir the road 3,500 arrested

மாவட்டம் முழுவதும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்3,500 பேர் கைது

மாவட்டம் முழுவதும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்3,500 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3,500 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணா மலை அண்ணாசிலை அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் குவிந்தனர். காலை 11.30 மணி அளவில் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் கள் ஊர்வலமாக பெரியார் சிலை நோக்கி சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப் பினர். இதனையடுத்து ஒருங் கிணைப்பாளர்கள் ஜோதி சங்கர், அண்ணாதுரை, முரு கன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் களின் போராட்டம் காரண மாக தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள் ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பணிகள் ஏதும் நடைபெற வில்லை. அரசு அலுவலகங் களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென் றனர்.

பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் பள்ளி அருகி லேயே விளையாடி மகிழ்ந் தனர்.

போராட்ட குழு ஒருங் கிணைப்பாளர்கள் கூறுகையில், இந்த மறியல் போராட்டத்தில் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர், அரசு ஊழியர்கள் 70 சதவீதம் பேர் கலந்துகொண்டதாக தெரிவித்தனர்.

போளூர் பஸ் நிலையம் முன்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ், பட வேட்டான், மாநில செயற்குழு உறுப்பினர் டேவிட்ராஜன் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பாக இருந்து ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். ஊர் வலத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் க.அன்பழ கன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் கி.திருமால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.லட்சுமணன் கலந்து கொண்டு பேசினார்.

நகர காவல் நிலையம் அருகே ஊர்வலமாக வந்தவர் கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 210 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுமார் 3,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.

சேத்துப்பட்டை அடுத்த செஞ்சி சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ஒருங் கிணைப்பாளர் சேகர் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 320 பேரை போலீசார்கைது செய்தனர்.

போராட்டம் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பழம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு வந்தனர்.

வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு இருந்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்செல்வன் தலைமையில் ஊர்வலமாக சென்று, கோட்டைமூலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 286 பேரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி அருகே மெக்கானிக்கை போலீசார் தாக்கியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
பவானி அருகே மெக்கானிக்கை போலீசார் தாக்கியதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. அறச்சலூரில் பரபரப்பு; மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ– மாணவிகள் சாலை மறியல், 60 பேர் கைது
அறச்சலூர் அரசு பள்ளிக்கூடம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. ராமாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ராமாபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி பெண்கள் சாலை மறியல்
மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.