‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மேம்பாலம் பராமரிப்பு பணி தொடங்கியது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மேம்பாலம் பராமரிப்பு பணி தொடங்கியது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் இருமத்தூரில் போச்சம்பள்ளி - தர்மபுரி சாலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் இந்த மேம்பாலத்தின் பல இடங்களில் மரச்செடிகள் முளைத்து உள்ளன.
இவைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதால் பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாலம் வலுவிழக்கும் நிலை உள்ளது.
எனவே, மேம்பாலத்தில் உள்ள மரச்செடிகளை அகற்றி விட்டு, மேம்பாலத்தை பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 21-ந் தேதி ‘தினத்தந்தி‘ நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது அந்த மேம்பாலத்தில் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் நலன்கருதி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story