கும்பகோணத்தில் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 133 வீடுகள் அகற்றம்
கும்பகோணத்தில் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 133 வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஓலைப்பட்டினம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை அப்புறப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டி ருந்தது.
அதன்படி நேற்று கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்காலின் கரையை ஆக்கிரமித்த வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி, கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ஜானகிராமன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அகற்றும் பணியில் ஈடுபட் டனர்.
அப்போது வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 133 வீடுகள் பொக்லின் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், ரமேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இங்கு வசித்து வந்தவர்களுக்கு சேஷம்பாடி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story