ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் தென்காசி ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன் மகன் இசக்கிராஜ் (வயது 27) கூலித்தொழிலாளி. இவருக்கும், ஆலங்குளம் ராஜீவ் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் மகேஸ்வரி (25) என்பவருக்கும் திருமணம் முடிந்து 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று மகேஸ்வரியை பார்ப்பதற்காக ஆலங்குளத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு இசக்கிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இசக்கிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கார் நெல்லையில் இருந்து புதிதாக வாங்கி வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story