விவாகரத்துக்கு காரணமான வீடியோ கேம்
மலேசியாவைச் சேர்ந்த ஒருவர், வீடியோ கேமுக்காக மனைவியை விவாகரத்து செய்ய இருக்கிறார்.
சீனாவைச் சேர்ந்த அந்த பெண்ணை 4 ஆண்டுகள் காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இருவரும் மலேசியாவுக்கு குடிவந்தனர். ‘கிங் ஆப் க்ளோரி’ வீடியோ கேம் என்றால் கண வருக்கு மிகவும் விருப்பம்.
ஆரம்பத்தில் கணவருடன் சேர்ந்து மனைவியும் விளையாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி விளையாடுவது பற்றி நண்பர்களிடம் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கணவர். இதை அறிந்த மனைவி, வீடியோ கேம் விளையாடுவதை விட்டுவிட்டார். பிறகு ஒரு குழந்தையும் பிறந்தது.
நாளுக்கு நாள் கணவருக்கு வீடியோ கேம் மீது இருந்த ஆர்வம் அதிகரித்தது. இரவில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருப்பார். மனைவி, குழந்தையிடம் அவர் நேரம் செலவிடுவதே இல்லை. மனைவி எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். கெஞ்சிப் பார்த்தார். ஆனால் கணவர் கேட்டபாடில்லை. இதையடுத்து மனைவி ஒருநாள் கோபத்தில் வீடியோ கேம் கருவியை விற்றுவிட்டார். விஷயம் அறிந்த கணவர் சண்டையிட்டார். விவாகரத்துக்கும் விண்ணப்பித்துவிட்டார். உடனே ஆவேசமான மனைவி ‘இப்படிப்பட்ட ஒரு மனிதருடன் இனி வாழ முடியாது, சீனாவுக்குச் சென்று என் மகளை வளர்த்துக் கொள்கிறேன்’ என்று கிளம்பிவிட்டார்.
Related Tags :
Next Story