தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ஆகும். இந்த கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணப்படும் அறை ஆகிய இடங்களை பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது–
தஞ்சை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவையாறு, தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிமனோகரன், தாசில்தார் அருணகிரி, தேர்தல் தனி தாசில்தார் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடன் இருநதனர்.

Related Tags :
Next Story