யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு


யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி வடக்கு வன உயிரின சரணாலய பகுதிகளிலிருந்து யானைகள் காப்புக்காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, பொதுமக்களை தாக்குவது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், பயிர்களை சேதப்படுத்துவை தவிர்க்கவும், உயிர் சேதம் ஏற்படுத்துவதை தடுக்கவும் வனத்துறை சார்பில் தளி, ஜவளகிரி, பனை, குல்லட்டி, சானமாவு உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியையொட்டி இரும்பு வேலி அமைத்தல், கிரானைட் கழிவுகளை கொண்டு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் தொங்கும் வகையில் சூரிய மின்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் தீபக்பில்கி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது யானைகளின் நடமாட்டம் குறித்தும், தடுப்பு சுவர், இரும்பு வேலி அமைத்தல் பணிகள் குறித்தும் வனத்துறையினரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது ஜவளகிரி வனச்சரக அலுவலர் முருகேசன், ஓசூர் வனச்சரக அலுவலர் சீதாராமன் மற்றும் வன அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story