திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2019 4:00 AM IST (Updated: 25 Jan 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 2-வது நாளாக திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான தாசில்தார் அலுவலகம் எதிரே 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 2 ஆயிரத்து 800 பேரை போலீசார் கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் காரணமாக திருவள்ளூரில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

செங்கல்பட்டு பஸ்நிலையம் அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக கூடியிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story