நிலுவை தொகையை வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகை
நிலுவைத்தொகையை வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர்,
கடலூர் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் நகராட்சி பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்குக்கூட தொகையை வழங்க முடியவில்லை. நகராட்சியில் பதிவு பெற்ற 35 ஒப்பந்ததாரர்களில் 24 பேருக்கு சுமார் ரூ.7 கோடி வரை பாக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு நகராட்சிகளின் மண்டல இயக்குனர் டாக்டர் இளங்கோவன் நேற்று வந்திருப்பதாக தகவல் அறிந்த ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் டாக்டர் இளங்கோவனை சந்தித்து மனுகொடுத்தனர். இது பற்றி நகராட்சி ஒப்பந்ததாரர் ரவி கூறியதாவது:-
கடந்த 1½ ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளுக்குரிய தொகை சுமார் ரூ.7 கோடியை வழங்கக்கோரி மண்டல இயக்குனரிடம் முறையிட்டோம். இதுதவிர ஒப்பந்ததாரர்கள் செலுத்திய முன்வைப்பு தொகை மற்றும் பட்டியல் நிலுவைத்தொகையையும் திருப்பி தராமல் வைத்துள்ளனர். அதனையும் உடனடியாக தருமாறு கேட்டுக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்செல்வன், ஆர்.வி.மணி, சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story