திருவள்ளூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் பங்கேற்பு


திருவள்ளூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 4:15 AM IST (Updated: 25 Jan 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாரத்தான் தொடர் ஓட்டப்பந்தயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையம் வரை சென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்துகளை தெரிவித்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் திரளான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு முக்கிய சாலை வழியாக கலெக்டர் அலுவலகம் வரை சென்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பன்னீர்செல்வம், ஜீவரேகா (தேர்தல்), தேர்தல் பிரிவு தனிதாசில்தார் பாபு, திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், நிர்வாக பொதுமேலாளர் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story