பாசனத்துக்காக பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் மலர் தூவினார்


பாசனத்துக்காக பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் மலர் தூவினார்
x
தினத்தந்தி 25 Jan 2019 11:00 PM GMT (Updated: 25 Jan 2019 7:40 PM GMT)

பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் டி.ஜி.வினய் திறந்து வைத்தார்.

சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு மலைப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அணையில் 81.80 அடி தண்ணீர் உள்ளது. 131 மில்லியன் கனஅடி தண்ணீர் மொத்த கொள்ளளவாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்த அணை சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இந்தநிலையில் விவசாயிகளின் பாசன வசதிக்காக நேற்று மாலை கலெக்டர் டி.ஜி.வினய் மலர்தூவி பரப்பலாறு அணையை திறந்து வைத்தார். இதில் சப்-கலெக்டர் அருண்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, ஒட்டன்சத்திரம் தாசில்தார் லீலாரெஜினா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் தனசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சாலித்தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்படி அணையிலிருந்து 50 கனஅடி வீதம் 2 நாட்களுக்கு விருப்பாட்சி பெருமாள்குளம், 40 கனஅடி வீதம் தாசரிபட்டி முத்து பூபால சமுத்திரம்குளம், 120 கனஅடி வீதம் தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், 70 கனஅடி வீதம் ஓடைப்பட்டி செங்குளம், 40 கனஅடி வீதம் வெரியப்பூர் ராமசமுத்திரம் குளம், 70 கனஅடி வீதம் ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவற்றுக்கு வருகிற 6-ந்தேதி வரை 12 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 6 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 34 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

பின்னர் கலெக்டர் டி.ஜி.வினய் நிருபர்களிடம் கூறுகையில், பரப்பலாறு அணையை தூர்வார தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறையின் ஒப்பந்த ஒப்புதல் கமிட்டி அனுமதியளித்து இருக்கிறது. எனவே விரைவில் அணை தூர்வாரப்படும் என்றார். 

Next Story