ஆரணி உதவி கலெக்டரை முற்றுகையிட்ட முதியவர்கள்
ஆரணி உதவி கலெக்டர் மைதிலியை 50 முதியவர்கள் முற்றுகையிட்டனர்.
ஆரணி,
ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த ஆரணி உதவி கலெக்டர் மைதிலியை ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் திடீரென முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அவர்கள், தாங்கள் அரசால் வழங்கப்படுகிற முதியோர் உதவித்தொகை பெற்று வருவதாகவும், ஆனால் இலவச அரிசி வழங்கப்படுவதில்லை என்றும், மேலும் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை எங்களுக்கு வழங்க மறுப்பதாகவும் கூறினர்.
அப்போது உதவி கலெக்டர் மைதிலி கூறுகையில், ‘அரிசி அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பரிசுத்தொகை வழங்க இயலாது’ என்றார்.
Related Tags :
Next Story