நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி


நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 26 Jan 2019 3:00 AM IST (Updated: 26 Jan 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.78½ கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. இதையொட்டி பஸ் நிலையம் மூடப்பட்டு, பஸ்கள் போக்குவரத்து மாற்றப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்த ஒரு சில கடைக்காரர்களும் நேற்று முன்தினம் தங்களது கடைகளை காலி செய்தனர். ஆனால் பல்வேறு கடைகள் காலிசெய்யப்படாமல் உள்ளன.

நேற்று முன்தினம் மதியம் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் இரும்பு தடுப்புகளை கொண்டு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அடைக்கப்பட்டது. இதேபோல் பஸ் நிலையம் முழுவதும் சுற்றி மூடப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பஸ்நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள், பிளாட்பாரங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பஸ்நிலையத்தின் மேற்கு புறங்களிலும், உட்புறங்களிலும் உள்ள பெரிய ஓட்டல்கள், கடைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இவை பஸ்நிலையத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கும் வரை இயங்கும் என்று கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் உள் பகுதியில் கீழ் தளம் அமைப்பதற்கு மண்ணை தோண்டி எடுக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர்.

Next Story